தேனி வீரப்ப அய்யனார் கோயில் திருவிழாவுக்கான கொடியேற்றம்!!


தேனி, அல்லிநகரம் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்திற்குள் உள்ள கொடி மரத்திற்கு கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இன்று, காலை அல்லிநகரம் பகுதியில் இருந்து வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் புறப்பட்டு மலைக்கோயிலுக்கு வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்புப்பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டு கொடி மரத்தில் கொடி கம்பம் ஏற்றப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். தேனியில் அருள்மிகு ஸ்ரீவீரப்பஅய்யனார், அருள்மிகு ஸ்ரீ சோலைமலை அய்யனார் சுவாமி திருக்கோயில் கொடியேற்றம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்ட புகைப்பட கலைஞர் விஜய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!