அனைத்து மக்கள் நீதிக் கட்சியின் மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!!

மதுரை, தத்தனேரி பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டு காளியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்யவும் கோவில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தவும் அனைத்து மக்கள்  நீதி கட்சியின் மகளிரணி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளர்கள்.

காளி என்றாலே உக்கிரமானவள், காளி என்றாலே அதீத சக்தி வாய்ந்தவள் என்று பக்தர்கள் பயம் கொள்வது உண்டு. எப்படி தன் பிள்ளைக்கு அநீதி நடப்பதை பார்த்துக் கொண்டு ஒரு தாய் அமைதியாக இருக்க முடியும். அப்படி தட்டி கேட்பது தான் உக்கிரம் என்றால் காளி தாய் அநீதி செய்பவர்களுக்கு கட்டாயம் உக்கிரமானவள் சக்தி வாய்ந்தவள் தான்.

வெள்ளிக்கிழமையும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலமான 5 முதல் மாலை 7 மணி வரை இங்கு பூஜை விசேஷமாக நடைபெறுவது வழக்கம்.தங்களுடைய வாழ்க்கையில் கிரக பாதிப்புகள் அல்லது செய்வினை பாதிப்புகள், கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை வழக்கு தொடர்பான பிரச்சனைகள் என நீங்கள் என்ன பிரச்சினையை சந்தித்துக் கொண்டு இருந்தாலும் மனதில் மிகுந்த நம்பிக்கையோடு இந்த தத்தனேரி சுடுகாட்டு காளியை வந்து சரணடைய நீங்கள் அவளை வழிபாடு செய்து சென்ற மறுநொடி உங்கள் கவலை தீர்ந்து போவதை பார்க்க முடியும் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். 

இங்கு நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகமாகிக் கொண்டே வருகிறது. உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து கொண்டிருக்கிறார்கள் இந்த மயான காளி கோயிலில் அடிப்படை வசதியான குடிதண்ணீர் வசதிகள் மற்றும் மேற்கூரைகள், சுற்று சுவர் அமைக்க வேண்டும் என்று புதிய நீதி கட்சி சார்பாக மாநில அணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

மேலும் இந்த கோவிலே அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அனைத்து மக்கள் நீதிக் கட்சி மகளிரணி மாநில தலைவி செல்லூர் பிரியா, மாநில இளம் பெண் பாசறை தலைவி அனிதா யுவராஜ், மாநில துணைப் பொதுச்செயலாளர். சுதா, திருநங்கை பிரிவு மாநிலத் தலைவி. கார்த்திகா, மதுரை மாவட்ட மகளிர் அணி தலைவி. பாண்டிச்செல்வி சார்பில்  கோரிக்கை விடுத்துள்ளனர்கள். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!