அரக்கோணம் நகர மன்ற கூட்டம்!டேபிள் தீர்மானங்களுக்கு சிறப்பு கூட்டம் நடத்துவதென அறிவிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகர மன்ற சாதாரண கூட்டம் மார்ச் 5ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர். லட்சுமி பாரி தலைமை வகித்தார் நகர மன்ற துணைத் தலைவர். கலாவதி அன்பு லாரன்ஸ் ஆணையாளர். ஆனந்தன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் துவக்கத்தில் திமுக நகர மன்ற குழு தலைவர்.துரை சீனிவாசன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து
நரசிம்மன் அதிமுக உறுப்பினர் பேசிய போது அரசு என்ன சாதனை படைத்தது தீர்மானம் எதற்கு என கேள்வி எழுப்பினார் அப்பொழுது துரை சீனிவாசன் திமுக உறுப்பினர் பேசிய போது 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் என்ன சாதனை படைத்தீர்கள் சட்டமன்ற உறுப்பினர் என்ன சாதித்தார் என கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்து பாபு அதிமுக உறுப்பினர் பேசிய போது சட்ட உறுப்பினர் சாதனை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை அவர் அதிகமாக தொகுதிக்கு செய்திருக்கிறார் பட்டியலிட்டு தருவேன் என பேசினார் சித்ரா காங்கிரஸ் உறுப்பினர் பேசிய போது தங்கள் வார்டில் வசிக்கும் 6 குடும்பத்தாருக்கு பட்டா வாங்க தீர்மானம் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார் இதுபோல் பாபு அதிமுக உறுப்பினர் தனது வார்டு மக்களுக்கும் பட்டா வாங்க டேபிள் தீர்மானம் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார் இதனுடைய நகர மன்ற தலைவர் பேசிய போது சோமசுந்தரம் நகர் உட்பட அனைவரது கோரிக்கை ஏற்று விரைவில் சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி தரப்படும் என்ற அறிவித்தார்
மேலும் அனைத்து தீர்மானங்கள் பாஸ் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது
அவரது அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்ததாவது
1.31 கோடி மகளிருக்கு மகளிர் உரிமை தொகை ரூ.5000 வழங்கியதற்காகவும் 37.79 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவி தொகை பெறுவோருக்காக சிறப்பு நிதி ரூ.2000 வழங்கியதற்காகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 23.56 லட்சம் நபர்களுக்கு வீட்டுமனை பட்டாவும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் பேருக்கு வீடு கட்டுவதற்கும் என 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி தந்த *மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மக்களுக்கு நலத்திட்டங்கள் அனைத்தும் சென்றடைய முழுஒத்துழைப்பு அளித்தும் அரக்கோணம் வளர்ச்சிக்கு ரூ.150 கோடிக்கு மேல் நிதி பெற்று தந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் .காந்திக்கும் திமுக
நகர மன்ற குழு தலைவர் சார்பில்
நன்றி தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு தீர்மானத்தில் துரை சீனிவாசன் கூறியிருந்தார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக