தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடைபெற்ற சனிப் பெயர்ச்சி விழா!!

தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு ஸ்ரீ சனி பகவான் பெயர்ச்சியடைந்தார். அதையொட்டி குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சிக்கான சிறப்பு பூஜைகள்

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு ஸ்ரீ சனி பகவான் பெயர்ச்சியடைந்தார். அதையொட்டி குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சிக்கான சிறப்பு பூஜைகள் லட்சார்ச்சனையுடன் துவங்கின. காலை சுயம்பு மூலவருக்கு மகா தீபம் காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். மூலவர் மற்றும் உற்சவருக்கு நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் பிரமாண்டமான மூன்று எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட்டன. மூலவருக்கு மகாதீபம் காட்டியபோது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!