குடியாத்தத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழா!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள்,விதவைகள் மற்றும் ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, சேமியா, ரவை, புடவைகள், லுங்கிகள் போன்ற நல திட்டங்கள் இன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கேவி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர். வி. இ. கருணா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி முன்னாள் ஆளுநரும் நகர கழக செயலாளருமான ஜே. கே. என். பழனி கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார். பின்பு ஏழைகளுக்கு நல திட்டங்களை வழங்கினார்.

இதில் முன்னாள் நகர மன்ற தலைவர். அமுதா . சிவப்பிரகாசம் . உயர் நீதிமன்ற வழக்கறிஞர். ஆர். கோவிந்தசாமி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர். எஸ்.டி. மோகன்ராஜ் மாவட்ட பிரதிநிதி. எஸ். என். சுந்தரேசன்,டி . நந்தகுமார தமிழக குரல் செய்தியாளர். இன்பராஜ். ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினார். மகளிர் அணியினர். கவிதா, மேகலா, லட்சுமி, சங்கீதா. உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் சுமார் நூறு நபர்களுக்கு நிவாரண பொருட்கள் . மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இறுதியில் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!