நத்தம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள லிங்கவாடியில் உள்ள மேற்கு தெருவில் கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர் வரவில்5லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலங்காநல்லூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் கிராம மக்களிடம் சமரசம் பேசினர். அப்போது
பழுதடைந்த மோட்டார் மற்றும் குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் நத்தம் - அலங்காநல்லூர் செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக