புதுக்கோட்டை அருகே வீரக்குடி நாடு வாணக்கன் காடு கிராமத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வீரக்குடி நாடு வாணக்கன் காடு கிராமத்தில் பிரசித்து பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 62 -ஆம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி. நிகழ்ச்சி க்கான ஆலோசனைக் கூட்டம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 14 கரைகாரர்களும் ஊர் பொதுமக்களும் மற்றும் அம்மன் இளைஞர் மன்றத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நடைபெறுகின்ற கபடி போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணியினருக்கும் தங்கும் இடம், தரமான உணவு, பயணப்படி வழங்குவது என கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும் வெற்றி பெறும் ஆண்கள் 1 அணியினருக்கு முதல்பரிசு ரூ.
100000, இரண்டாம் பரிசு ரூ.
70000, மூன்றாம் பரிசு ரூ.
50000 நான்காம் பரிசு ரூ
50000,
பெண்கள் அணியினருக்கு
முதல்பரிசு ரூ.
100000, இரண்டாம் பரிசு ரூ.
70000, மூன்றாம் பரிசு ரூ.
50000/ நான்காம் பரிசு ரூ
50000, ஆகிய பரிசுதொகை
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கால் இறுதியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் அணியினருக்கு தலா 10.000(பத்து ஆயிரம்) வழங்கப்படும். மேலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசாக பிரிட்ஜ், டிவி, சைக்கிள், ஹெல்மெட், சாம்பியன் கோப்பை கேடயம், மெடல், வழங்குவது என்றும் நமது மண்ணில் விளையும் சுவை உள்ள பலாப்பழம் வழங்குவது என்றும் கிராமத்தின் சார்பாக முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் இருக்கின்ற தலைசிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு கபடி ரசிகர்கள் பொதுமக்கள் முழுஆதரவு தர வேண்டும் என வாணக்கான் காடு கிராமபஞ்சாயத்து சார்பாக விழா குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக