திட்டக்குடியில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு! தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தல்!!


கடலூர்: வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, திட்டக்குடி வதிர்ஷ்டபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கி, திட்டக்குடி பேருந்து நிலையம் மற்றும் தேரடி வீதிகளை சுற்றி, இறுதியாக திட்டக்குடி காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த அணிவகுப்பில்,திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன்பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆவினங்குடி காவல் நிலைய ஆய்வாளர் இளவரசன்  திட்டக்குடி காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ராமநத்தம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம் வேப்பூர் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சமியா சுல்தானா உள்ளிட்டோர் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் சுமார் 50 துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.இந்த அணிவகுப்பு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!