திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை!!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தற்போது இறுதி நிலையை (Final stage) எட்டியுள்ளது. 

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 26 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் (26 + 1) ஒதுக்கீடு செய்ய இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் நிபந்தனை விதித்ததால் இழுபறி நீடித்த நிலையில், மார்ச் 3-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற திமுகவின் கெடு மற்றும் ராஜ்யசபா தேர்தல் நெருக்கடி காரணமாக இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக் கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டியிருப்பதால், காங்கிரஸை இந்த எண்ணிக்கையில் சம்மதிக்க வைக்க திமுக தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்தத் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!