திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!!

 


*திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!*

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாதம்தோறும் வழங்கப்படும் 1000 ரூபாய் இனி 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இலவச மின்சாரம் பெறும் பயனாளிகளுக்கு நவீன மின்சார பம்புசெட்கள் இலவசம்.

10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர, ஆண்டு வருமான வரம்பு ரூ. 5 லட்சமாகவும் காப்பீடு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ. 2500 ஆக உயர்த்தப்படும்.

மீன்பிடி தடை காலம் நிவாரணம் ரூ. 12,000 ஆக உயர்த்தப்படும்.

முதியோர் உதவித்தொகை ரூ. 1200- லிருந்து ரூ.2000 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1500- லிருந்து ரூ. 2500 ஆகவும் உயர்த்தப்படும்*

-திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!