குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணி !!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காக்கா தோப்பில் உள்ள அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரவியல் நிபுணர் டாக்டர் பெ சௌந்தரராஜன் அவர்கள்  ஆரோக்கியமாக வாழ உடல் உறுப்பை  பாதுகாக்க வேண்டும் என்றும் அதிலும் முக்கியமானது சிறுநீரகம் அதனால்  தண்ணீர்  அதிகம் குடித்தும் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதும் முக்கியம் என  பொதுமக்களுக்குதெரிவித்துக்கொண்டார். 


இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட வேலூர் K V R  மருத்துவமனையின் இயக்குநர்  சிறுநீரகவியல் மாற்று நிபுணர் டாக்டர். வெங்கட்ரமணன் அவர்கள்  பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  மேலும் அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி 

 தலைமை வகித்தார்.  இதில்   அத்தி மருத்துவமையின் நிர்வாக அதிகாரி சரவணன் , குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே குமரவேல், அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை மற்றும் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்  உடனிருந்தனர். பேரணியில்  அத்தி கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 150 பேர் பங்கேற்று பொது மக்களுக்கு  சிறுநீரகம் பாதுகாப்பு பற்றிய கோஷங்கள் மற்றும் பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  குடியாத்தம் நகர காவல் துறை

உதவி ஆய்வாளர். தாரணி அவர்கள் பேரணிக்கு  பாதுகாப்பு வழங்கினார்.அத்தி கல்வி குழுமத்தின் அறங்காவலர் டாக்டர். சௌ . சுகநாதன் அவர்கள் பேரணியை ஒருங்கிணைத்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!