அறந்தாங்கி அருகே ஏம்பல் ஸ்ரீ முத்தையா சாமி ஆலய மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்தையா சாமி ஆலய மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். 10ம் ஆண்டாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 42 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.
பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 9ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 21ஜோடி மாடுகளும், கரிச்சான் மாடு பிரிவில் 22ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டி சீறிப்பாய்ந்தன.போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 3லட்சம் மதிப்பிலான கோப்பைகள், ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சாலையில் இரு புறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.ஏம்பல் காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக