நத்தம் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி வழிபாடு!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு நடந்தது. இதையொட்டி சனீஸ்வர பகவானுக்கு விசேஷ பூஜைகளும், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகசால பூஜைகளும் நடந்தது. பின்னர் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோவில் உள்பிரகார வளாகத்தில் உற்சவர் சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், ஹோம பூஜைகளும் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவரையும், மூலவரையும் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இது தவிர பக்தர்கள் தங்களது பெயர், ராசிகளுக்கு பரிகாரம் செய்து ஹோமத்தில் எள்ளு பொட்டலங்களை போட்டு வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், கோவில் குருக்களும் செய்திருந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!