தேனி மாவட்டம், ஓடைப்பட்டி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் திருவிழா - முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு மற்றும் அன்னதானம் நடைபெற்றது!!
தேனி மாவட்டம், ஓடைப்பட்டியில் உள்ள, காமுகுல ஒக்கலிகர் (காப்பு) கவுடர் நல சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உற்சவத் திருவிழா வரும் மார்ச் 28, 29 மற்றும் 30 (பங்குனி 14, 15, 16) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு, கெடு வைக்கும் நிகழ்வு மற்றும் முகூர்த்தக்கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நந்தகோபால் அரங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை காமுகுல ஒக்கலிகர் நலச்சங்கத்தின் கௌரவத் தலைவர் மனோகரன், தலைவர் ராஜன், செயலாளர் கணேசன், பொருளாளர் இளங்கோவன் மற்றும் சங்க நிர்வாகிகள், அன்னதானக் குழுவினர் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக