வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் உறுதி!!
நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இதுபோன்ற தருணத்தை எதிர்கொண்டதில்லை; உள்நாட்டு தேவைக்காக எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்.
கேஸ் தட்டுப்பாடு குறித்த வதந்தி பரவுகிறது; தடையின்றி கேஸ் கிடைக்க உறுதி செய்வோம்.
வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும்.
வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை.
எல்பிஜி உற்பத்தி கடந்த சில நாட்களில் 28% அதிகரிப்பு; விநியோக கால அளவில் மாற்றம் எதுவுமில்லை.
நாட்டுக்கு தேவையான அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை வழியே வரும் கச்சா எண்ணெய்யைவிட மாற்று வழியில் கூடுதல் எண்ணெய் வருகிறது.
சீரான எரிபொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம்.
– மக்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக