உன் முயற்சி வெற்றி பெறும் வரை அல்ல உனக்கான அடையாளம் கிடைக்கும் வரை!!
சார்லஸ் டிக்கன்ஸ் சிறந்த எழுத்தாளர் சிறந்த புதின எழுத்தாளர் பத்திரிக்கையாளர் சமூக விமர்சகர். 1812 ல் இங்கிலாந்தில் பிறந்து தனது பன்னிரண்டாம் வயதில் தந்தை கடன் காரணமாக சிறைக்குச் சென்றதால் குழந்தை தொழிலாளராக வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலை இருந்தது எலிகள் மற்றும் பூச்சிகள் நிறைந்த ஒரு அறையில் பாட்டில்களுக்கு லேபிள் ஒட்டும் பணியை செய்தார் அதற்கு அடுத்து உள்ள அறையில் தங்கள் தங்கிக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. வறுமையின் பிடியில் இருந்தாலும் அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது அப்பொழுது பத்திரிக்கைக்கு ஒரு கதை எழுதலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது அவருடைய முதல் கதையை யாருக்கும் தெரியாமல் எழுதி இரவு நேரத்தில் ஒரு தபாலில் கொண்டு போய் சேர்த்தார். அந்தக் கதை பிரசுரம் ஆகியது ஆனால் அவருக்கு எந்த சன்மானமும் கிடைக்கவில்லை ஆனாலும் தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து தன்னுடைய கதையை அனுப்பிக் கொண்டே இருந்தார் அப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கதைகள் பிரசுரம் ஆக தொடங்கியது ஒரு கதைக்கு அவருக்கு வந்து ஒரு பவுண்டு என்று அவருக்கு சன்மானம் கிடைக்க ஆரம்பித்தபோது அவருடைய நம்பிக்கை அதிகமானது. தொடர்ச்சியாக எழுதி அவருடைய ஒரு எழுத்துக்கு ஒரு பவுண்டு என்ற அளவுக்கு அவருடைய நாவல்களுக்கு பெரிய மதிப்பு ஏற்பட்டது. அவருடைய அவருடைய வறுமை, தன் வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் மற்றும் சந்தித்த நபர்களின் மீதான தாக்கங்கள் தான் அவருடைய நாவல்களுக்கு கருப்பொருளாக அமைந்தது. இவருடைய எழுத்துக்கள் சமூகம் சார்ந்த நிறைய பிரச்சனைகளை ஆராய்வதாக இருந்தது.1836 ல் அவர் எழுதிய " பிக்விக் பேப்பர்ஸ் " என்ற நாவல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இன்றும் உலகம் பேசும் ஒரு வசீகரமான எழுத்து நடை அவரிடம் இருந்தது. அவர் தன் வறுமையை காரணம் காட்டி எந்த முயற்சியும் செய்யாமல், இதுதான் நம்முடைய நிலை, இதுதான் விதி என்று இருந்திருந்தால் இன்று உலகம் அவருடைய பெயர் பேசியிருக்காது. எனவே நம் திறமையை வெளிக்காட்ட முதலில் நம்மிடம் என்ன திறமை உள்ளது என்ன விருப்பம் உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து அந்த விருப்பத்தை நம்முடைய முயற்சியின் மூலமாக அதை ஒரு திறமையாக மாற்றி அதை சரியான இடத்தில் அதை நாம் உபயோகிக்கும் போது இந்த உலகத்தில் வெற்றியோடு புகழும் நம்மிடம் வந்து சேரும். எனவே முயற்சி என்பதை கைவிடாமல் தொடர்ச்சியாக முயற்சி செய்யும்பொழுது நமக்கான அடையாளம் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக