அரக்கோணத்தில் சாவணன் பங்களிப்பில் நடைபெற்ற தி டவுன்ஹால் அன்னதானம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் அரசு பொது மருத்துவமனை எதிரில் டவுன் ஹால் உள்ளது. இந்த டவுன்ஹால் நிர்வாகம் சார்பில் தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை சிறப்பாக நடத்தி வருகிறது அந்த வரிசையில் நடைபெற்ற அன்னதானம் உறுப்பினர் சரவணன் பங்களிப்பில் நடைபெற்றது. இந்த அன்னதானத் திட்டத்திற்கு டவுன்ஹால் தலைவர். ஜி. கே. பாபுஜி தலைமை தாங்கினார். பொது செயலாளர் டாக்டர். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் டவுன்ஹால் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பலரும் கலந்து கொண்டு அவர்களும் அன்னதானம் வழங்கினர். இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமூகப் பொறுப்பாளர் முருகவேல் செய்திருந்தார் டவுன் ஹால் மேலாளர் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக