பெண்களுக்கு பாலியல் தொல்லை: இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி கைது!!
பாலியல் புகாரில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி மதூர் சத்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. இவர் சமூக வலைதளங்கள், ஊடக விவாதங்கள் மற்றும் யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்து கொண்டு தன்னுடைய அரசியல் கருத்துகளைப் பேசி பிரபலம் அடைந்தவர்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் நட்புச் சங்கம் ஆகியவற்றில் தீவிரமாக இயங்கி வந்தார்.
இந்நிலையில், மதூர் சத்யா மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. புகார்களை விசாரித்த கட்சி நிர்வாகிகள், மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கினர்.
மதூர் சத்யா மீது அளிக்கப்பட்ட புகார் உண்மை எனத் தெரியவந்ததையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சேலத்தில் இருந்த மதூர் சத்யாவை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக