காளையார் கோயில் சொர்ண காளீஸ்வரர் திருக்கோயில்!!
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் சொர்ண காளீஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிறப்பு பெற்றது மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பாக மூன்று சிவன் சன்னதி மூன்று அம்மன் சன்னதி இங்கு அமைய பெற்றுள்ளது. பண்டாசுரனை கொன்ற காளி தன் பாவம் நீங்க சிவனை வழிபட்டதால் சாபம் நீங்கி தன் கரிய நிறம் மாறி சொர்ண
நிறத்தில் பொன் போல் நிறம் மாறி சொர்ணவள்ளியாக மாறி சொர்ண காளீஸ்வரரை கரம் பிடித்து சொர்ணவள்ளி அம்மனாக இங்கு அருள் பாலிக்கிறார். இங்கு சுயம்புலிங்கம் திவ்ய லிங்கம் ஆஸ்ர லிங்கம் மானுட லிங்கம் என்று நான்கு வகையான லிங்கங்கள் உள்ளது.
சங்ககாலத்தில் காளையார் கோயில் திருக்கானப்பேர் என வழங்கப்பட்டது. சோமநாத மங்கலம் எனவும் அழைக்கப்பட்டது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் வேட்டைக்கு வந்து திரும்பிச் செல்ல வழி தெரியாமல் நின்றபோது மதுரை மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் மன்னனுக்கு திருகாட்சி தந்து அவருக்கு வழி காட்டியதால், அதன் நன்றி கடனாக வரகுண பாண்டிய மன்னன் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் இங்கு சன்னதிகளை அமைத்து வழிபட்டார் சுவாமி சன்னதியை நோக்கியவாறு பிரகார சுவற்றில் வரகுண பாண்டிய மன்னனின் சிலை கை கூப்பிய நிலையில் உள்ளது .
சோமேஸ்வரர் சன்னதிக்கு செல்லும்போது இடதுபுறத்தில் இந்திரனால் பிரதிஷ்டை செய்த சகஸ்ர லிங்கம் அமைந்துள்ளது இந்திரன் தான் வாங்கிய சாபத்தை நீக்க பரிகாரம் தேடி பல சிவாலயங்களை தரிசித்து வந்தார் அப்பொழுது இந்த ஆலயம் வந்ததும் ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த புண்ணியம் கிடைத்த உணர்வு ஏற்பட்டதால் ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்கள் இருப்பது போன்ற சகஸ்ர லிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டை செய்ததாக வரலாறு உள்ளது
ஐராவதம் என்னும் தேவலோக இந்திரனுடைய யானை மகரிஷி ஒருவர் கொடுத்த பிரசாத பூமாலையை அலட்சியம் செய்ததால் சாபம் பெற்றது அந்த சாபம் நீங்க இந்த
தலத்தில் உள்ள சிவனுக்கு பூஜை செய்து சாபம் விமோச்சனம் பெற்றது. தேவலோக யானை மானிடர் கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் ஒரு நாள் ஒரு மனிதன் கண்ணுக்கு தெரிந்ததால் தன் தலையை பூமியில் மோதி பாதாளம் நோக்கி சென்றதாக வரலாறு உள்ளது அது மோதியதால் ஏற்பட்ட பள்ளத்தில் நீரூற்று உருவாகி அது கஜ புஷ்கரணி என்னும் திருக்குளத்தை உருவாக்கியது அது கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது இது யானை மடு தீர்த்தம் எனவும் பெயர் பெற்றது ராவணனை கொன்ற பாவம் போக்க ராமன் இந்த கஜபுஷ்கரணி குளத்தில் புனித நீராடியதாக கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சொர்ண காளீஸ்வரர் லிங்கம் சுயம்புலிங்கம் சோமேஸ்வரர் லிங்கம் சகஸ்ர லிங்கம் வருண லிங்கம் ஆகியவை தேவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கமாகும் சோமேஸ்வரர் லிங்கம் அகத்தியர் மற்றும் ரிஷிகளால் பூஜிக்கப்பட்டதாகவும் சுந்தரேஸ்வரர் லிங்கம் வரகுண பாண்டியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட மானுட லிங்கம் ஆகும்
சைவ குரவர்களில் ஒருவரான சுந்தரர் திருக்கானப்பேர் வந்து ஸ்வர்ண காளீஸ்வரர் தரிசிக்க வந்தார் அப்பொழுது பார்க்கும் இடமெல்லாம் லிங்கமாக தெரிந்ததால் கால் வைக்க அஞ்சி நின்ற இடத்திலேயே சிவனை நினைத்து உன்னை பார்க்க முடியவில்லை என அருந்தினார் அப்பொழுது இரக்கம் கொண்ட சிவன் தன் வாகனமான காளையை அனுப்பினார் காளை கோவிலில் இருந்து வந்து சுந்தரர் என்ற இடம் வரை வந்து சென்று திரும்பியது அப்பொழுது காளையின் கால் பட்ட இடமெல்லாம் லிங்கம் மறைந்தது. காளை கால் பட்ட இடம் வழியாக வந்து என்னை தரிசித்து செல் என சிவன் அசரீதியாக கூறினார் சுந்தரர் மிக மகிழ்ச்சியுடன்
அவ்வழியாக வந்து சிவனை தரிசித்தார் காளை வழிகாட்டிய கோவில் என்பதால் காளையார் கோவில் என இவ்வூர் பெயர் பெற்றது மருது பாண்டியர்கள் கட்டிய மிகப்பெரிய கோபுரம் இங்கு காணப்படுகிறது இந்த கோபுரத்தின் மேலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களை தரிசிக்கலாம் இக்கோவிலில் உள்ள பெரிய தேர் மருது சகோதரர்களால் அளிக்கப்பட்ட தேராகும் ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களை பிடிக்க முடியாமல் சரணடையாவிட்டால் அவர்கள் கட்டிய பெரிய கோபுரத்தை இடித்து விடுவதாக சொன்னதும் கோயிலை காப்பாற்றுவதற்காக ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர் அதன்பின் தூக்கிலிடப்பட்டதாக வரலாறு
மருது சகோதரர்களின் சமாதி அவர்கள் விருப்பப்படி சொர்ண காளீஸ்வரர் கோயிலில் எதிரிலேயே அமைக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தில் சொர்ண காளீஸ்வரர் தேர் திருவிழாவும் ஆடிப்பூரத்தில் சொர்ணவல்லி அம்மையாரின் திருவிழாவும் வைகாசி விசாகத்தில் சோமேஸ்வரருக்கு தேர் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது
சிவகங்கையில் இருந்து கிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும் தேவகோட்டையில் இருந்து மேற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து தென்கிழக்கே 66 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவி பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக