புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெற்ற தொல்லியல் மரபு பயற்சி பட்டறை!!
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்று துறையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதி நல்கையுடன் கல்லூரி கல்வித்துறை ஆணையரின் வழிகாட்டுதலின்படி தொல்லியல் மரபு மன்ற பயிற்சி பட்டறை 06/03/2026 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துறை புதுக்கோட்டை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் திரு எம்.ஸ்ரீராம் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அருங்காட்சியத்தின் தேவையை விளக்கி கூறிய அவர் அருங்காட்சிய பொருட்களை எப்படி பாதுகாத்து பராமரிப்பது பற்றியும் விரிவாக மாணவர்களிடம் எடுத்துக் கூறினார். தமிழ்நாட்டின் பழைமையான இரண்டாவது பெரிய அருங்காட்சியமான புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் விளங்குகிறது எனக் கூறினார். மகாத்மா காந்தியடிகள் செட்டிநாட்டிற்கு வருகை புரிந்ததை முன்கூட்டியே அறிந்த புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவர் தொண்டைமான் காந்தியடிகளுக்கு எழுதிய கடித்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு வருகை தர அவரை அழைத்துள்ளார் அதற்கு பதில் கடிதம் எழுதிய காந்தி வருவதாக ஒப்புக்கொண்டார் இதற்கான கடித ஆதாரங்களை காட்சிப்படுத்தி காண்பித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் பா புவனேஸ்வரி தலைமை உரை ஆற்றினார்.
பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்த இணை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முனைவர் மு. பற்குணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கணினி துறை இணை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் சகாதேவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பயிற்சி பட்டறையில் முதுகலை வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சுற்றுலா துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இணை பேராசிரியர் முனைவர் அ. சந்திர போஸ் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக