கோவையில் கேஜி நிறுவனத்தின், டி.என்.சி.டி சார்பில் நடைபெற்ற ‘கிராண்ட் சிட்டி’ பிரீமியம் எனும் குடியிருப்பு திட்டத்தின் அறிமுக விழா!!

கோவை மாவட்டம், கோவையில் கடந்த 93 ஆண்டுகளாக மக்களின் மனதில், நம்பிக்கையும் தரத்தையும் வழங்கி வருகின்ற கேஜி நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான டி.என்.சி.டி  தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ எனும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை, கோவை சத்தி சாலை, கணபதி பகுதியில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை டி.என்.சி.டி இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், உதவி துணைத் தலைவர் யுவராஜ், மற்றும் மூத்த மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷுவா ஆகியோர் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து இது குறித்து சஞ்சனா விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது.., வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையமாக உருவெடுத்து வரும் பகுதிகளில், கணபதி, சரவணம்பட்டி ஆகியவை அடங்கும், இங்கு ஐடி காரிடார் அதிகமாக அமைந்துள்ளது எனவே, இங்கு ‘கிராண்ட் சிட்டி’ அமைக்க பட்டுள்ளது. இங்கு அடுக்குமாடி வீடுகள் வாங்க முக்கிய காரணமாக, முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்கள்  உள்ளிட்ட முக்கிய இடங்கள் அருகில் இருப்பதால், சிறந்த இணைப்பும் வசதியான நகர வாழ்க்கையும் ஒருங்கிணைந்த வாழ்வையும் வழங்கும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார். 

இந்த திட்டத்தில் 1, 2 மற்றும் 3 படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளீல், நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப திறமையான இடவசதி திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் அதிகமாக கிடைக்கும் வகையில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளில், சில 3 படுக்கையறை கொண்ட வீடுகள் பொதுச் சுவர் இல்லாமல் தனியுரிமை அம்சத்துடன் வழங்கப்படுகின்றது என்றார். மேலும், எலக்ட்ரிக் இ.வி. சார்ஜிங் வசதிகள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன், வரும் மார்ச் 8 வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இ.வி பைக் வழங்கப்படும் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!