நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா!!


ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் பேரூர் தி.மு.க சார்பில், நெமிலி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக கழக செயலாளரும் நெமிலி ஒன்றியம் பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு அவர்கள் முன்னிலை வகித்தார். நெமிலி பேரூர் கழக செயலாளர். ஜனார்த்தனன் வரவேற்றார்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் இளைஞர்களுக்கு வாலிபால் கிட், கிரிக்கெட் கிட், கேரம் போர்டு, செஸ் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பெண்கள் பிரிவில் கபாடி விளையாட்டிற்கான பேக் மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர்.ஆர். காந்தி அவர்கள் வழங்கினார். இதனைத்தொடர்ந்து அருகே உள்ள கலா பேரடைஸ் திருமண மண்டபத்தில் ஆயிரம் நபர்களுக்கு அசைவ உணவு வழங்கினர். இதில் நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர். ரேணுகாதேவி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், அவைத்தலைவர். புருஷோத்தமன், ஒன்றிய துணை செயலாளர். முகமது அப்துல் ரகுமான், பாண்டியன், சேகர், கோபி, கிளை கழக, வட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!