பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விழா!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சி.சிவராமன் அய்யா அவர்கள் மாணவர் சேர்க்கை விழாவை தொடங்கி வைத்து, புதிய மாணவச் செல்வங்களுக்கு கிரீடம் அணிவித்து பூங்கொத்து, இனிப்பு கொடுத்து தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
இவ்விழாவில் நெமிலி வட்டாரக்கல்வி அலுவலர்கள். மீனாட்சி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித்தலைமைஆசிரியர்.இரா.விநாயகம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர். கிரிஜாசீதாராமன், மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர். மணிமேகலை லிங்கநாதன், ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாணவர் குமார் மற்றும் பெற்றோர்கள், கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள். ஐடாரஞ்சிதம், ஞானம், சியாமளாமற்றும் சத்துணவு பணியாளர்கள், முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணியாளர்கள், பள்ளி தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் என திரளாக கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
நிறைவாக ஆசிரியர். மலர்விழி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்.



கருத்துகள்
கருத்துரையிடுக