வாக்காளர் விழிப்புணர்வு மாபெரும் கிரிக்கெட் திருவிழா!!

 


183- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.அபிநயா அவர்கள் தலைமையில் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ,தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என  8 அணிகள் கலந்து கொண்டனர். 

வெற்றி பெற்ற  முதல் இரண்டு அணியினருக்கு  பரிசு கோப்பை மற்றும் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் மெடல் வழங்கி பாராட்டப்பட்டது. 

மேற்படி போட்டியில்  அறந்தாங்கி வட்டாட்சியர் கவியரசு , ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் சிவகுமார்,மணமேல்குடி வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங் , ஆவுடையார் கோயில் தனி வட்டாட்சியர் சுரேஷ் மற்றும் ஆவுடையார்கோவில் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன், அறந்தாங்கி தேர்தல் துணை துணை வட்டாட்சியர் சக்கர பாண்டியன்,அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் , மணமேல்குடி தாலுகாவைச் சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!