குடியாத்தம் அருகே சாலை விபத்து இளம்பெண் படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் வட்டம் 15. சீவூர் மதுரா முனாப் டிப்போ பகுதியில் உள்ள எடை மேடையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் டிஎன் 93 ஈ 58 60 என்ற கண்டெய்னர் லாரி மேற்படி எடை மேடையில் எடை போடுவதற்காக வந்து பின்னோக்கி எடுக்கும்போது . மேற்படி முனாப் டிப்போ பகுதியைச் சார்ந்த தஸ்லிமா த/பெ இப்ராஹிம் (வயது 19) என்பவர் டி என் 83 09102 என்ற ஆக்சிஸ் இரண்டு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியினால் மோதி தலையில் படுகாயம் அடைந்துள்ளார்.
மேற்படி காயமடைந்த தஸ்லிமா காரில் வேலூர் நாராயணி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மேற்படி எடை மேடையில் எடை பார்ப்பதற்காக வரும் வாகனங்களால் பொதுமக்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் எடை மேடையை அகற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 60 ஆண்கள் 15 பெண்கள். இதனால் சாலை போக்குவரத்து 20 நிமிடங்கள் தடை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு நகர காவல் துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் சாலை மறியல் கைவிடப்பட்டு தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது மேற்படி விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக