திடீர் மழை தாக்கம் – மக்காச்சோளம் நாசம்! விவசாயி கண்ணீரில்!!...

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த புல்லூர் கைக்காட்டி அருகே அய்யானார்பாளையம் கிராமத்தை சேர்ந்த மஞ்சமுத்து அவர்களின் 5 ஏக்கர் விவசாய நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

அந்த நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், நமச்சிவாயப்புரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கோவிந்தராஜ் கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் இந்தாண்டு விதைத்த மக்காச்சோளம் முழுமையாக சேதமடைந்தது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ் கடும் கவலையில் உள்ளார்.

அரசு உடனடியாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!