நத்தம் கோவில்பட்டி மேல தெரு கோவில் காளை வயது மூப்பின் காரணமாக இறப்பு!பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!!

 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி மேல தெருவில் உள்ளது பகவதி அம்மன் கோவில். கோவிலுக்கு சொந்தமான கொம்பன் என்ற காளை வயது மூப்பின் காரணமாக இன்று இறந்துவிட்டது. இது பொதுமக்களிடையே மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.  

கொம்பன் காளையானது 12 வருடங்களுக்கு முன்பு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களால் சிறப்பாக வளர்க்கப்பட்டு தவசிமடை வெள்ளோடு வெள்ளாளப்பட்டி கொசவபட்டி சத்திரப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு உள்ளிட்ட சிறந்த ஜல்லிக்கட்டு களில் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் கொம்பன் என்று சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டது. இதுவரை 50 வாடி வாசல்களை காளையர்களிடம் பிடிபடாமல் கடந்தது குறிப்பிடத்தக்கது இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, நிறைய கேடயங்கள் மற்றும் கட்டில் பீரோ சைக்கிள் என எண்ணில் அடங்கா பரிசுகளை தட்டிச்சென்று ஊர் மக்களுக்கு பெருமை சேர்த்தது இது 50-வது வாடி வாசலை கடந்து வெற்றி பெற்று வந்த பொழுது ஊர் மக்களால் நத்தத்திலிருந்து மாலை மரியாதைகள் வான வேடிக்கைகளுடன் சிறப்பாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது .

கொம்பன் காளையானது வாடிவாசலை சுமார் 10 அடிக்கும் மேல் தாவி கடப்பது கொம்பனின் தனி சிறப்பாகும் இக்காளை உயிரிழந்ததால் ஊர் பொதுமக்கள் அவரவர்கள் சீர்வரிசைகளுடன் வந்து கொம்பனுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். கொம்பன் இறந்ததின் காரணமாக அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஊர் பொதுமக்களால் அஞ்சலி செலுத்துவதுநிறைவு பெற்றவுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் முன்பாக குழி தோண்டப்பட்டு அதில் புதைக்கப்பட இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!