புதுக்கோட்டை மற்றும் விராலி மலைத் தொகுதியில் போட்டியிட முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர். மதியழகன் தலைமைக் கழகத்தில் மனு!!
புதுக்கோட்டை மாவட்டம், மற்றும் புதுக்கோட்டை நகரை சேர்ந்தவர் ரெ. மதியழகன். இவர் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் வாழ்ந்து வருகிறார். வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் .தலைமை கழக பேச்சாளராக உள்ளார். 1983 ஆம் ஆண்டு மன்னர்கல்லூரியில் மாணவர் திமுக தலைவராக பதவி வகித்து சேவை புரிந்தார் .அதனைத் தொடர்ந்து மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளராக தொண்டு செய்தார். மாவட்ட திமுக இளைஞரணி செயலாளராக பணிபுரிந்தார் .1985 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடியதால் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்..1986ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக புதுக்கோட்டை சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். பாரத் பந்து போராட்டத்தில் ஈடுபட்ட காரணமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் உறுப்பினராக பணிபுரிந்தார். புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 61 வயது நிரம்ப பெற்ற மதியழகன் தன்னை தற்பொழுது முழு நேரமாக அரசியலில் ஈடுபடுத்தி உள்ளார். அன்று முதல் இன்று வரை திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக பாடுபடும் மதியழகன் வருகிற சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மற்றும் விராலிமலையில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமைக் கழகத்தில மனு கொடுத்துள்ளார். விராலிமலையப் பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பழனியப்பன் என்பவருக்கு சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் மதியழகனுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து நிலவுகிறது. அதேபோன்று புதுக்கோட்டையில் டாக்டர் முத்துராஜா, டாக்டர் முத்து கருப்பன், முன்னாள் எம்.பி.அப்துல்லா மாவட்ட செயலர் செல்லபாண்டியன் மற்றும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் ரெ.மதியழகனுக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்க கைகூடி வருவதாகவும் பேசப்படுகிறது. புதுக்கோட்டை, விராலிமலையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று ரெ.மதியழகன் எதிர்நோக்கி உள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக