திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற பங்குனிப் பெருவிழா!!

மதுரை : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனிப் பெருவிழா இன்று (மார்ச் 23, 2026) காலை கொடியேற்றத்துடன் மிகவும் விமரிசையாகத் தொடங்கியது. 

15 நாட்கள் நடைபெறும் இந்தப் பெருவிழாவின் தொடக்கமாக, இன்று அதிகாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை மணக்கோலத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள, வேத மந்திரங்கள் மற்றும் 'அரோகரா' முழக்கங்கள் விண்ணதிர தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி புகழ்பெற்ற 'பங்குனி உத்திரம்' மற்றும் 'கைப்பாரம்' நிகழ்ச்சியும், ஏப்ரல் 2-இல் சூரசம்ஹாரமும், ஏப்ரல் 4-ஆம் தேதி மீனாட்சி - சொக்கநாதர் முன்னிலையில் நடைபெறும் 'திருக்கல்யாண' வைபவமும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாகும். சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுரையே தற்போது திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!