மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏரியில் உள்ள வீடு அகற்றம்!!
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா செய்யானம் கிராமத்தில் ஏரியில் ஒரு தரப்பினர் பல நாட்களாக ஆக்கிரமித்து அதில் ஆஸ்பெட்டா சீட்டு வைத்து வீடு அமைத்து இருந்தனர். மற்றும் குறிப்பிட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வந்தனர். அதனால் நீர்நிலை பாதிக்கப்படுவதாக ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மணமேல்குடி வட்டாட்சியர். மார்ட்டின் லூர்து கிங் மற்றும் மீமிசல் காவல் துறையினர் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் இன்று அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக