தேனி: கம்பம் அருகே சுருளிப்பட்டி ஆற்றில் மூழ்கிய சிறுவன் – தேடும் பணியில் தீயணைப்பு துறை தீவிரம்!!
தேனி: சுருளிப்பட்டி அருகே முல்லைப் பெரியாறு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தவசி (13) என்ற சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியதாக தகவல்.
மேலும் சுருளி அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால், உறவினர்களுடன் வந்த அவர் அருகிலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக