தேனி: வீரபாண்டி ஆற்றில் நடுவே கட்சிக் கொடியுடன் நின்ற சிறுவன்!!
தேனி:வீரபாண்டி: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வீரபாண்டி ஆற்றில் திரளாகக் கூடினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஆன்மிக நிகழ்வுகளிலும், ஆற்றில் நீராடுவதிலும் ஈடுபட்டிருந்தனர்.
அந்நேரத்தில், சில சிறுவர்கள் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி கொடிகளை ஏந்தி கூட்டத்தின் நடுவில் நின்று கொடியை அசைத்தனர். இது அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆன்மிக சூழலில் அரசியல் கட்சி கொடிகள் காணப்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியது. ஞாயிற்றுக்கிழமை கூட்டநெரிசலின் போது நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு இருந்த பலரின் கவனத்தையும் பெற்றதாக கூறப்படுகிறது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக