பொது தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கு சில யோசனைகள்!!
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10த் பொது தேர்வை நோக்கி, தயாராகி வரும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
குறிப்பு எடுத்து படிப்பது:-
பாடங்களை அப்படியே படிக்காமல் சிறு சிறு தலைப்புகளாக குறிப்பு எடுத்து படித்தால் ஞாபகத்தில் எளிதில் நிற்கும்
சரியான ஓய்வு:-
6 முதல் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்
சரிவிகித உணவு :-
தானியங்கள் விட்டமின் பி நிறைந்த இறைச்சி, மீன், பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை உணவுகள் எடுத்து கொண்டால் மன அழுத்தம் குறையும்.
மாதிரி தேர்வுகள்:-
முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை எழுதி பயிற்சி எடுப்பது சிறந்தது.
நேர்மறை எண்ணம் :-
இந்த தேர்வை சிறப்பாக செய்வேன் என்று மனதில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
ஓய்வு இடைவெளி:-
தொடர்ச்சியாக படிக்காமல் சிறு சிறு ஓய்வு எடுத்து படிக்கலாம்
இரவு முழுதும் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
காபி, டீ அதிகம் குடிப்பதை தவிர்க்கலாம்
தேர்வில் வெற்றி பெற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப் பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக