குடியாத்தத்தில். வருவாய்த் துறையினர் தொடர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் அவதி!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. கடந்த 24 2 2026 முதல். சுமார் 42,000 வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வருவாய்த்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மை துறை நில அளவு துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையில் ஆன அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கிடுடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே ஏற்ற வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மை துறை நில அளவுத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் . பணி பளுவை கருத்தில் கொண்டு அனைத்திய நிலை அலுவலருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட . காலை முறை ஊதியம் உடனே வழங்கிட வேண்டும். தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தில் அரசு ஊழியர்கள் பிடித்தம் செய்யப்படும் 12% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும். 2003. ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி  கணக்கில் கொண்டு சென்று மீள வழங்கிட வேண்டும்.TAPS. திட்டத்தில் கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களை பெற பெறுவதை அரசு உறுதி . செய்திட வேண்டும் உள்ளிட்ட9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே .வி‌‌ ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!