குடியாத்தத்தில் குமரி அனந்தன் அவர்களின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமம் , கம்பன் கழகம் மற்றும் தமிழ் சங்கம் இணைந்து இலக்கிய செல்வர் தகைசால் தமிழர் விருது பெற்ற குமரி அனந்தன் அவர்களின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் போட்டிகள் நடைபெற்றது.
இதில் மன நல சிகிச்சை நிபுணரும் மற்றும் குமரி அனந்தனின் மகனும் திரு கீதன் அவர்கள் அனைவரும் வரவேற்று தந்தை மற்றும் சகோதிரியின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார் இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறு நீரவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களுக்கு தமிழ் பற்றும் மொழித் திறனும்,வளர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டு போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள் (5000/-,3000/-, 2000/- மற்றும் 10 மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூபாய் 1000/- ) மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் .
இதில் விருந்தினராக கலந்துக்கொண்ட கம்பன் கழக நிறுவனர். ஜே கே என் பழனி அவர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என இன்றைய மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார் . குடியாத்தம் வழக்கறிஞ்சர் மற்றும் தமிழ் சங்கத்தின் துணை தலைவர் கே எம் பூபதி திருக்குறள் உணர்ந்து பண்புகளை பின்பற்றி நாம் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்
குமரி அனந்தனின் உற்ற நண்பர் அருணாச்சலம் அவர்கள் அவரோடு போராடிய காலத்தையும் அவரின் தமிழ் பற்றுபற்றியும் பகிர்ந்துகொண்டார் . தமிழ் சங்கத்தின் பொது செயலாளர் முனைவர் சம்பத் குமார் அவர்கள் நோக்கவுரையும் நீங்களும் பேச்சியாளர் ஆகலாம் ஈன்ற புத்தகத்தை பற்றியும் விளக்கினார் . திரு A j A கார்த்திகேயன் அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டார் . மேலும் அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி அவர்கள் ,குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஹேமலதா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மேலும்அத்தி மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் சரவணன் அவர்கள் , மருத்துவர்கள், பேராசிரியர்கள் , ஆசிரியர்கள் , செவிலியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர் . கம்பன் கழகத்தின் பொருளாளர் திரு சிவகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார் . அத்தி கல்வி குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் சௌ . சுகநாதன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
குடியாத்தம் செய்தியாளர் கே வி ஆர்.

கருத்துகள்
கருத்துரையிடுக