நத்தம் அருகே உரிய ஆவணமின்றி பிடிபட்ட ரூ.93 ஆயிரத்து 350 தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் சிக்கியது!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நத்தம் அய்யனார்புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவராமன் தலைமையில் போலீஸார் அடங்கிய குழு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்த போது அக்காரில் ஈரோடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கம் ரூ.93 ஆயிரத்து 350 கொண்டு வந்தது தெரியவந்ததை தொடர்ந்து அதைக் கைப்பற்றி நத்தம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின் சாந்தப்பா மற்றும் உதவி தேர்தல் அறவலர் பாண்டியராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக