புதுகை மாவட்டத்திற்கு 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு!!
புதுக்கோட்டை மாநகரைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா 09.03.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும். பள்ளி,கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதற்கு பதிலாக 14.03.2026 சனிக்கிழமை பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். இவ்வாறு கலெக்டர்.மு. அருணா ஐ. ஏ. எஸ். அவர்கள் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக