திருமயம் அருகே குழிபிறையில் ரூ 8 கோடியில் புதிதாக துணை மின் நிலையம் கட்ட கட்டுமானப் பணிக்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழா!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் ஒன்றியம் குழிபிறையில் ரூ8 கோடியில் புதிதாக துணை மின் நிலையம் கட்ட அரசு அனுமதித்துள்ளது.இந்நிலைய கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது.  

விழாவுக்கு செயற்பொறியாளர் அக்னிமுத்து தலைமைவகித்தார். ஒன்றிய திமுக நிர்வாகிகள் , கணேசன்,ராஜா,செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். முன்னாள் ஊராட்சித் தலைவர்  அழகப்பன்  வரவேற்றார்.   33 கி.வா சக்தியுடைய  புதிய  துணைமின்நிலையம் ரூ7.97 கோடி மதிப்பீட்டில்  கட்டுவதற்கான பூமி பூஜையை  அமைச்சர் ரகுபதி தொடங கிவைத்துப்பேசினர். அவர்பேசிய தாவது. இப்பகுதி மக்களின்  நீண்ட நாளைய கோரிக்கை  திமுக ஆட்சியில் நிறைவேறியுள.ளது மகிழ்ச்சியாக உள்ளது. திருமயம் தொகுதியில் ஒரே ஆண்டில் கடியாபட்டி,வேந்தன்பட்டி,குழிபிறை ஆகிய 3 இடங்களில் துணை மின்நிலையங்கள் தந்து மக்களுக்கு  தடையில்லா மின்சாரம். கிடைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. குறிப்பாக மின்வழித்தடங்களை வீடு,கடை ,தொழிற்சாலை ஒரு வழியிலும்,விவசாயிகளின் பம்பு செட் மோட்டார்களுக்கு தனி வழியிலும. மின்சாரம் விநியோகிக்க அரசுநடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் விவசாய பம்பு செட்டு மோட்டார்களுக்கு கூடுதல் மின்சாரம் தடையின்றி கிடைக்கும். என்றார். நிகழ்ச்சியில் உதவி கூட.ட பொறியாளர் அசோக்,தலைமையாசியர் வெள்ளச்சாமி,முன்னோடி விவசாயி சிங் காரம் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் கிராம கமிட்டி தலைவர். சந்திரன் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!