சர்வதேச மகளிர் தினம்! மார்ச் 8 !!

சர்வதேச மகளிர் தினம் மார்ச் எட்டாம் தேதி உலக அளவில் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமூக பொருளாதார கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடும் நாளாகும். 2026-ல் மகளிர் தின கருப்பொருள்  " Give to gain" என்பதாகும். இதன் பொருள் தாராள மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்பின் மனநிலையை ஊக்குவிக்கும்  விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாள் ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட தினமாகும்.இன்றைய நாளில் பல நாடுகளில் பொது விடுமுறையாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது பெண் கல்வி பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் சமுதாயத்தில் பெண்களின் பங்கு பாலின சமத்துவம் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் மிகச் சிறப்பான முறையில்  பெண்கள் முன்னேறி வருகின்றனர். 

  சாதனைப் பெண்கள் வரிசையில் அன்று தன் நாட்டை காக்க வாளெடுத்த வீரமங்கை வேலுநாச்சியார் வடக்கில் ஜான்சி ராணி லட்சுமி பாய் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட அஞ்சலை அம்மாள் ராமாமிர்தத்தம்மாள் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிதி அமைச்சர் சீதாராமன் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்,எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்நாட்டு பெண் முத்துலட்சுமி, முதல் பெண் தமிழ் மேஜர் ஜென்ரல் டெலோஸ் ஃப்ளோரா,தீயணைப்பு மற்றும் மீட்பு சாதனைப் பெண் மீனாட்சி விஜயகுமார், சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் கேப்டனாக பணிபுரிந்த லட்சுமி கிருஷ்ணன், விளையாட்டு துறையில் இந்தியாவிற்கு பல பதக்கங்களை வாங்கி தந்த பி டி உஷா,பிவி சிந்து பேட்மிட்டன்,சைலஜா சுந்தர் கிரிக்கெட், இப்படி பல பெண்கள் சாதனையாளர்களாக நட்சத்திரங்களாக ஜொலிக்காத துறையே இல்லை என்று சொல்லலாம்.பெண்கள் நாட்டின் அங்கம் ஒரு பெண் இல்லாத வீடு எப்படி இருக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே.

 ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி கல்வியோடு பாலின சமத்துவத்தை கற்றுக் கொடுத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து அமைதியான உலகமாக கண்டிப்பாக மாறும் என்பதில் ஐயமில்லை அம்மாவாக சகோதரியாக மனைவியாக மகளாக இன்று பல வடிவங்களில் நம்மோடு நடமாடும் அந்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!