கரடிக்குப்பம் ஊராட்சியில் ரூ.76 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 2 கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்! அமைச்சர். ஆர். காந்தி!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் கரடிக்குப்பம் ஊராட்சியில் ரூ.76 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற  2 கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கான திறந்து வைத்தார்கள் இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். 

 

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள்  இன்று (3.3.2026) சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், கரடிக்குப்பம் ஊராட்சியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தையும்,  கரடிக்குப்பம் ஊராட்சி நாயக்கன் பாளையம் கிராமத்தில்  ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  தானிய சேமிப்பு கிடங்கினையும் என மொத்தமாக ரூ.76 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 2 கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.  

தொடர்ந்து, கரடிக்குப்பம் ஊராட்சியில் நகரும் நியாய விலைக் கடையினை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யா தேவி, மாவட்ட சுகாதார அலுவலர்  மரு.செந்தில் குமார், துணைப் பதிவாளர் (பொது விநியோகம்) சிவமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, அம்முண்டி கூட்டுறவு சங்கம் சர்க்கரை ஆலை உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர். இரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!