ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரூராட்சி 6-வது மாநில நிதியில் 4- வகுப்பறைக் கட்டடம் அமைச்சர். மெய்யநாதன் திறந்து வைத்தார்!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி ஆறாவது மாநில நிதியின் கீழ்  நான்கு வகுப்பறை கட்டடங்களை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் செயல் அலுவலர் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி ஆலங்குடி நகரச் செயலாளர் பழனிகுமார் துணைச் செயலாளர் எஸ் வி டி என்ற செங்கோல்  மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜ் அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் அதேபோல் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் கலைஞர். கருணாநிதியின்  விளையாட்டு  உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

விழாவில் பேரூராட்சி  தலைவர். ராசி முருகானந்தம் தலைமையில் ஆலங்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு அமைச்சர். சிவ.வீ. மெய்யநாதன்  வழங்கினார். நிகழ்ச்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை பெற்றுச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!