கோவை பந்தயசாலையில் ராயல் கேர் மருத்துவமனை சார்பாக, தலைக் காயம் குறித்த, விழிப்புணர்வு மாதத்தை குறிக்கும் வகையில், நடைபெற்ற வாக்கித்தான் போட்டி, 500க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ மாணவியர்கள் பங்கேற்பு!!


கோவை மாவட்டம்,உலக தலைக் காயம் மற்றும் பல்வேறு காயங்கள் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, ராயல் கேர் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை ஒரு விழிப்புணர்வு வாக்கித்தானை ஏற்பாடு செய்தது. இது மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சக்தி சுகர்ஸ், கார்ப்பரேட் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் முதல் ராயல் கேர் மருத்துவமனை, சிட்டி யூனிட், டாக்டர் நஞ்சப்பா சாலை வரை நடைபெற்றது. இந்த ரேலி டாக்டர் பி.கோசல் ராம், தலைவர், ஐ.எம்.ஏ., கோயம்புத்தூர் கிளை மற்றும் டாக்டர் பரமேஸ்வரன், கௌரவ செயலாளர், ஐ.எம்.ஏ., கோயம்புத்தூர் கிளையால் துவக்கி வைக்கப்பட்டது. இதில் டாக்டர் கே. மாதேஸ்வரன், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், ராயல் கேர் மருத்துவமனை, நரம்பு மற்றும் முதுகெலும்பு அறுவை சிறப்பு மருத்துவர் முன்னிலையில் நடைபெற்றது. டாக்டர் கே. மாதேஸ்வரன், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறியதாவது.. அதிக வேக வாகனங்கள், விழிப்புணர்வு இல்லாமை, போக்குவரத்து விதிகளை பின்பற்றாமை, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமை, அதிவேகம் மற்றும் வாகனங்களின் மோசமான பராமரிப்பு ஆகியவற்றால் பல விபத்துக்கள் ஏற்பட்டு தலைக் காயங்கள் ஏற்படுகின்றன. ராயல் கேர் மருத்துவமனை பொது விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தை நடத்துகிறது என்றார்.

தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பாரா மருத்துவர்கள், நிர்வாக ஊழியர்கள், மருத்துவ மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் இதில் பங்கேற்று பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!