பழுதாகி நின்ற கார் வெளிச்சம் போட்ட குட்கா கடத்தல்!வேப்பூர் அருகே 419 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் – கடத்தியவர்கள் தப்பியோட்டம் !!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பழுதாகி நின்ற காரில் இருந்து 419 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வேப்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விடுத்தாசலம் அருகே வேப்பூர் பகுதியில் உள்ள சேப்பாக்கம் எல்லையில் திருநாவுக்கரசர் மடம் அருகே டிஎன் 12 டி 0369 என்ற எண்ணுடைய கார் காலை முதல் ஆட்கள் யாரும் இல்லாமல் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சோதனை செய்தனர்.
அப்போது காரில் தடை செய்யப்பட்ட சுமார் 419 கிலோ பான் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கார் திடீரென பழுதாகி நின்றதால் அதில் வந்தவர்கள் தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கார் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வேப்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும் குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக