ஆலங்குடி அருகே மேல புள்ளான் விடுதி கிராமத்தில் போதை மாத்திரை கலந்த கள் குடித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 40 பேருக்கு உடல்நல குறைவு-போலீசார் விசாரணை!!
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதை மாத்திரைகள் கலந்த கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இந்நிலையில் வடகாடு காவல் சரக்கத்திற்கு உட்பட்ட மேலப்புள்ளான்விடுதி கிராமத்தில் போதை மாத்திரை கலந்த பனங் கள் குடித்த 40 நபர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு அருகே உள்ள அரண்மனை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் அவரது மனைவி வாசுகி மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட 5 ஐந்து பேர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிறர் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வடகாடு போலீசார்
கள் எடுக்க பயன்படுத்தப்பட்ட பானைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து இந்த விற்பனையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக