உசிலம்பட்டியில் நடைபெற்ற 4-ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு!!


திருமயம் தாலுகா உசிலம்பட்டியில்   தமிழ் போற்றி கலாச்சாரம் காப்போம் இளைஞர்களால் 4ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் கலந்து கொண்டன. வடமாடு மஞ்சுவிரட்டுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் ஒவ்வொரு காளையாக நீண்ட கயிற்றில் கட்டி களம் இறக்கினர். இந்த காளையை அடக்க 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். ஒவ்வொரு காளையை அடக்கவும்  குழுவுக்கு தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மாடுபிடிவீரர்கள் காளையை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து மாடுபிடி வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம், சில்வர் அண்டா, கட்டில் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.இதனை தொழில்அதிபர் அய்யாக்கண்ணு குடும்பத்தினர். வழங்கினர். அதே போல் மாடு வீரர்கள் கையில் சிக்கவில்லை என்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவித்து காளையின் உரிமையாளருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்சியில் கலந்து கொண்ட 7 காளைகளை வீரர்கள் அடக்கி பரிசு பெற்றனர். ஐந்துகாளைகள் வெற்றி பெற்றன. இதில் காளைகள் முட்டியதில் 4 மாடுபிடி வீரர்கள்  காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த வீரர்களுக்கு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துவந்த  திரளான மக்கள் பார்த்து ரசித்தனர்.  கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

படவிளக்கம்.திருமயம் தாலுகா உசிலம்பட்டியில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் ஒரு காளையின் வாலைபிடித்து இழுத்து அடக்க முற்படும் காளையர்கள்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!