இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த.ஜெ.யு.சந்திரகலா IAS !!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையம்  வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்.சுனில் குமார் சிங் இ.ஆ.ப., காவல் பார்வையாளர்.நிலாப்ஜா சௌத்ரி இ.கா.ப., ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையம்  வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (23.3.2026) இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்.சுனில் குமார் சிங் இ.ஆ.ப., காவல் பார்வையாளர். நிலாப்ஜா சௌத்ரி இ.கா.ப., ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இடது புறத்தில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம் தரைதளத்தில் 41.இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி, முதல் தளத்தில் 39.சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி,   அதேபோன்று, கல்லூரியின் வலது புறத்தில் உள்ள 30 வகுப்பறை கொண்ட கட்டிடத்தில் தரைதளத்தில் 42.ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, முதல் தளத்தில்  38.அரக்கோணம் சட்டமன்ற தொகுதி, ஆகிய தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறைகள் எவை என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக பாதைகள் பிரித்து அமைக்கப்பட உள்ளது. ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு செல்லாமல் நேரடியாக அந்த தளத்திலிருந்து வெளியில் வரும் வகையில் பாதைகள் மிகவும் பாதுகாப்புடன் அமைக்கப்படவுள்ளது. வாக்கு எண்ணும் அறையில் மின் வசதிகள் போதுமான அளவு இருப்பதையும், காற்றோட்ட சூழ்நிலையை ஏற்படுத்திட மின்விசிறிகள் அமைக்கவும் கேட்டுக் கொண்டார்கள். 

இந்த ஆய்வின் பொழுது வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகள் எண்ணும் இடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் இடங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் பணிகள் மற்றும் மின்சார பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் முழுமையாக தடுப்பு கட்டமைப்புகள் அமைத்து வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகள் குறித்து வாக்கு எண்ணும் மையத்தை  சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.சிபின் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா,  நேர்முக உதவியாளர் தேர்தல் பூமா, சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!