ஆலங்குடி மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு நிலுவைக்கடன் ரூ. 3.30 லட்சம் தீர்வு !!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மாவட்ட உரிமையியல் நீதிதீதுறை நடுவர் நீதிமன்றத்தில்  வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில்  நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் லோக் அதாலக்  யூகோ வங்கியின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி பாலராஜமாணிக்கம்  தலைமையில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் சமூக ஆர்வலர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் ஆலங்குடி, வடகாடு, பகுதியில் உள்ள யூகோ வங்கி கிளைகளில்  தனிநபர் கடன், கல்விக்கடன், விவசாய கடன், தொழில் கடன்,  உள்ளிட்ட கடன்களைப் பெற்று நீண்ட காலமாக வங்கிக்கு  திரும்ப செலுத்தாமல் நிலுவையில் உள்ள  100  வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 4 வழகுகளில் சமரச தீர்வில் ரூ. 3.30 லட்சம் முகாமில் உடனடி தீர்வு காணப்பட்டது.  முகாமில் வங்கியின் கிளை மேலாளர் அய்யப்பன்,  மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு  பணியாளர் இளநிலை நிர்வாக பணியாளர் அருண்குமார் வட்ட சட்ட தன்னார்வ பணியாளர்கள் செந்தில்ராஜா, வினோபாவா ஆகியோர் செய்திருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!