பி .ஆர். ஜி. அருண்குமார் எம். எல். ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 300 க்கும் மேற்பட்ட திமுகவினர்!!
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் திமுக கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு எம் எல் ஏ கட்சித் துண்டு அணிவித்தும் நலத்திடங்களை வழங்கியும் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அதிமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை பகுதி கழக செயலாளர் மாரிச்சாமி வரவேற்றுப் பேசினார். கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் சுப்பையன் முன்னிலை வகித்துப் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டம் ஒன்று எம் ஜி ஆர் ஆட்சியிலும், திட்டம் இரண்டு ஜெயலலிதா ஆட்சியிலும், திட்டம் மூன்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் கொண்டுவரப்பட்டதாகவும், கோவையில் கட்டப்பட்டுள்ள அனைத்து மேம்பாளங்களும் அதிமுக ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டவை என தெரிவித்தார்.
இவ்விழாவில் திமுகவில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் முன்னாள் திமுக நிர்வாகி எஸ் ஆர் கந்தசாமி தலைமையில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் முன்னிலையில் அஇஅதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அதிமுகவில் இணைந்த அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கட்சித் துண்டு அணிவித்தும், நலத்திடங்களை வழங்கியும் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
கட்சியில் இணைந்த முன்னாள் திமுக நிர்வாகி கந்தசாமி பேசும்போது திமுக உரிய மரியாதை இல்லை என்றும், கடன்கள் மட்டுமே வாங்குகின்றனர். மக்களுக்கு நலத்திட்டங்களை செய்வதில்லை அதனால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் 300 க்கும் மேற்பட்டோருடன் இணைவதாக தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரது திரு உருவப்படங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள் சுரேஷ், மாரப்பன், காளிச்சாமி, ஜெயக்குமார், ஐ டி விங் மணிகண்டன், குணசேகரன்,
கிருஷ்ணவேணி உள்பட கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக