அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி ஸ்ரீ வாழப்பிள்ளையார் சாமி ஆலய மகா கும்பாபிஷேகம்! 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி தாலுகா, அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ வாழப்பிள்ளையார் சாமி ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி மக்களால் முடிவு செய்யப்பட்டது.இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 21ம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து 2நாட்களாக 2கால யாக பூஜை நடைபெற்று வந்தது.விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஞான மணிகண்டன் சர்மா தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்கள்,ஆன்மீக மெய்யன்பர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாகுடி காவல்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.





கருத்துகள்
கருத்துரையிடுக