விடுதி அலட்சியம் வெடித்தது! 26க்கும் மேற்பட்ட மாணவிகள் உணவு விஷச்சத்து – மருத்துவமனையில் அவசர அனுமதி!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே ம.புடையூர்:அரசு மாணவிகள் விடுதியில் வழங்கப்பட்ட உணவு விஷச்சத்தாக மாறியதால் 26க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவு உட்கொண்ட பின்னர் மாணவிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளால் அவதிப்பட்டனர். உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் அறிந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு திரண்டதால் பதற்றம் நிலவியது. விடுதி உணவுத் தரம் மற்றும் நிர்வாக அலட்சியம் குறித்து கடும் கேள்விகள் எழுந்துள்ளன.
அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக